சில வருடங்களுக்கு முன்பு மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி ஆந்திராவில் மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் – பிசினஸ்மேன்.இந்தப் படத்தின் அப்பட்டமான காப்பிதான் அஞ்சான் படம் என்ற செய்தி தெலுங்குப்பட உலகத்தில் பரவி வருகிறது. இப்படியொரு செய்தி பரவ என்ன காரணம்? அஞ்சான் படத்தின் கதையும், பிசினஸ்மேன் படத்தின் கதையும் ஒன்றுபோல் உள்ளதா? கதையில் ஒற்றுமை இல்லையாம். ஒரு வசனத்தில்தான் ஒற்றுமை என்கிறார்கள். பிசினஸ்மேன் படத்தில் என் பெயர் சூர்யா இல்ல, சூர்யா பாய் என்று வசனம் பேசுவார் மகேஷ்பாபு.அஞ்சான் படத்தில் என் பேர் ராஜு இல்ல, ராஜூ பாய்னு சொல்லு என்ற வசனத்தைப் பேசுகிறார் சூர்யா. இந்த ஒற்றுமையை வைத்து அஞ்சான் படத்துக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துவிட்டனர் தெலுங்குப்பட உலகினர்.
அதுமட்டுமல்ல, அஞ்சான் படத்தை பிசினஸ்மேன் படத்துடன் ஒப்பிட்டு பேச இன்னொரு சம்பவமும் காரணம். இந்தக் கதையை முதலில் தெலுங்கில் இயக்கும் திட்டத்துடன் மகேஷ் பாபுவிடம்தான் லிங்குசாமி சொன்னாராம். கதையைக் கேட்ட மகேஷ்பாபு, இது பிசினஸ்மேன் கதை போலவே இருக்கு என்று சொல்லி லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன் பிறகுதான் சூர்யாவிடம் அதே கதையைச் சொல்லி ஓகே பண்ணினாராம் லிங்குசாமி.தமிழில் அஞ்சான் என்ற பெயரில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் படம் வெளியாக இருக்கிறது. அஞ்சான் படம் பற்றி தற்போது பரவிவரும் வதந்தியினால் தெலுங்கு பிசினஸ் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் உள்ளது லிங்குசாமி தரப்பு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி