பாரீஸ் :- பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் கடந்த 3–ந்தேதி மலை ஏறும் குழுவினர் சென்றனர். அப்போது பனிக்கட்டிகளிடையே பிணம் ஒன்று கிடப்பதை கண்டு பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பரிசோதித்ததில் அந்த உடல் கடந்த 1982–ம் ஆண்டு மார்ச் மாதம் மாயமான பாட்ரீஸ் ஹைவோட் என்ற 23 வயது வாலிபர் உடல் என தெரியவந்தது.
இவர் 4,100 அடி உயரத்தில் மலை ஏற்றத்தில் ஈடுபட்டு இருந்த போது மோசமான வானிலை காரணமாக மாயமானவர் என்றும், இவருடன் ஜீன் மார்க் பொவின் என்பவரும் உடன் சென்று இருந்தார். இவர் தப்பி விட்ட நிலையில் ஹைவோட் பலியாகி விட்டது தெரியவந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி