சென்னை:-இயக்குனர் விஷ்ணுவர்த்தன் ஆர்யா நடிக்க இயக்கி வரும் புதிய படம் ‘யட்சன்’. இதில் கிருஷ்ணா, ஆர்யாவுக்கு நிகரான கேரக்டரில் நடிக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக தீபா சந்நிதி நடித்து வருகிறார். தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடி தேடி வந்தார் விஷ்ணுவர்த்தன்.
கதைப்படி கிருஷ்ணாவை டார்சர் செய்து கொண்டே இருக்கும் காதலி வேடம். துறுதுறுவென சண்டைபிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருந்தார்.சமீபத்தில் வெளிவந்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி படங்களில் சுவாதி அப்படிப்பட்ட கேரக்டரில்தான் நடித்திருந்தார். அதனால் ஸ்வாதியையே நடிக்க வைக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் ஸ்வாதி, கிருஷ்ணா தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி