செய்திகள்,திரையுலகம் தமிழில் ரீமேக் ஆகும் மலையாள திரைப்படம்!…

தமிழில் ரீமேக் ஆகும் மலையாள திரைப்படம்!…

தமிழில் ரீமேக் ஆகும் மலையாள திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான படம் அருகில் ஓராள். பீட்சா மாதிரி காமெடி த்ரில்லர் படம். இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். மலையாளத்தில் இயக்கிய சுனில் இப்ராஹிம் இயக்குகிறார்.

மலையாளத்தில் இந்திரஜித் நடித்த கேரக்டரில் சித்தார்த் நடிக்கிறார். ரம்யா நம்பீசன் நடித்த கேரக்டரில் சானிதா நம்பியார் நடிக்கிறார். நவீன்பாலி நடித்த கேரக்டரில் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரன் கார்த்திக் நடிக்கிறார். பிரதாப் போத்தன் நடித்த கேரக்டரில் ஜெயபிரகாஷ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளது. தமிழில் இன்னும் பெயர் வைக்கவில்லை. அருகில் ஒருவன் என்ற பெயர் வைக்கப்படலாம் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி