அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் கேரளாவில் உள்ள கொச்சி ஆகும். டைரக்டர் விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். இவர்கள் நிச்சயதார்த்தம் கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. பின்னர் அங்குள்ள தேவாலயத்துக்கு சென்று வழிபட்டனர்.
திருமணம் இந்து முறைப்படி சென்னையில் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அமலாபாலை இந்து மதத்துக்கு மாறும்படி விஜய் வற்புறுத்தவில்லை. வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்ல வேண்டும் என அமலாபால் விரும்பம் தெரிவித்தார்.
உடனடியாக அவரை வேளாங்கண்ணிக்கு விஜய் அழைத்து சென்றார். கோவிலில் இருவரும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்பினார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி