செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை கால்பந்து:இறுதி போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!…

உலக கோப்பை கால்பந்து:இறுதி போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!…

உலக கோப்பை கால்பந்து:இறுதி போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!… post thumbnail image
சா பாவ்லோ:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதின. இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

பின்னர் கூடுதலாக 30 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் இரு அணிகளுக்கு பெனால்டி ஷுட் வழங்கப்பட்டது. அதில் தனது நான்கு பெனால்டி ஷுட்களையும் வெற்றிகரமாக கோலாக்கியது அர்ஜென்டினா.

மறுபுறம் நெதர்லாந்தின் நான்கு பெனால்டி ஷுட்களில் இரண்டை அர்ஜென்டினா கோல் கீப்பர் ரோமெரோ அபாரமாக பாய்ந்து கோல் விழாமல் தடுத்தார். இதனால் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆட்டநாயகனாக அர்ஜென்டினா கோல் கீப்பர் ரோமெரொ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி