இந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் ஜெர்மனி அணிக்கு எதிரான அரை இறுதியில் மோசமாக விளையாடி வரலாறு காணாத தோல்வியை தழுவியது.
மிகவும் முக்கியமான அரை இறுதியில் அந்த அணி 1–7 என்ற கோல் கணக்கில் தோற்றது.
பிரேசில் கால்பந்து வரலாற்றில் இதுதான் மோசமான தோல்வியாகும். 1920–ம் ஆண்டு உருகுவே அணிக்கு எதிராக 0–6 என்ற கணக்கில் தோற்று இருந்தது. அதன் பிறகு கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பிரேசில் அணி இப்படி ஒரு மோசமான தோல்வியை தழுவது இப்போதுதான்.
போட்டியை நேரில் பார்த்த பிரேசில் ரசிகர்களும், டெலிவிஷனில் பார்த்த ரசிகர்களும் இந்த தோல்வியால் கண்ணீர் விட்டனர். ஜெர்மனி ஒவ்வொரு கோல் விழுந்த போதும் ரசிகர்கள், ரசிகைகள் கண்ணீருடன் காணப்பட்டனர். பிரேசில் முழுவதும் சோகமே காணப்பட்டது.போட்டி முடிந்ததும் பிரேசில் வீரர்களும் மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறினர். அவர்களுக்கு வெற்றி பெற்ற ஜெர்மனி வீரர்கள் அறுதல் கூறினார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி