செய்திகள்,திரையுலகம் நடிகை ஸ்ரீப்ரியா சிறந்த இயக்குனர் என பாராட்டிய பிரபல நடிகர்!…

நடிகை ஸ்ரீப்ரியா சிறந்த இயக்குனர் என பாராட்டிய பிரபல நடிகர்!…

நடிகை ஸ்ரீப்ரியா சிறந்த இயக்குனர் என பாராட்டிய பிரபல நடிகர்!… post thumbnail image
சென்னை:-1980களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ரீபிரியா.திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டு விட்ட ஸ்ரீப்ரியா பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வந்தார். படம் இயக்குவதையும் நீண்ட இடைவெளிக்குப் பின் தொடர்ந்தார்.தமிழில், சமீபத்தில் ‘மாலினி 22 பாளையம்கோட்டை’ படத்தை இயக்கினார். இந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும் தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். முதன் முறையாக ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி வெங்கடேஷ் மிகவும் பாராட்டுகிறார்.

ஸ்ரீப்ரியா மிகச் சிறந்த இயக்குனர். இப்படத்தின் கதை மிகவும் வலிமையானது. அவர் இதற்கு முன் சில படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். அவருடைய திறமையை இந்தப் படத்தில் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மீனாவுடன் இந்தப் படம் மூலம் ஜோடி சேருகிறேன். நாங்கள் ஜோடி சேர்ந்து நடித்த “சாண்டி, சுந்தரகாண்டா, அப்பைகாரு, சூர்யவம்ஷம்” ஆகியவை மாபெரும் வெற்றிப் படங்கள். இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக மீனா நடித்துள்ளார்.

ஒரு சில நடிகைகளால்தான் திரையில் உணர்ச்சி பூர்வமாக நடிக்க முடியும். அதில் மீனா மிகச் சிறந்தவர். எங்களது வெற்றிக் கூட்டணி இந்தப் படத்திலும் தொடரும் என்று நம்புகிறேன். இப்படத்தை நான் ரீமேக் படம் என கருதவில்லை. சிறந்த ஒரு படம் என்றுதான் பார்க்கிறேன். இம்மாதிரியான படத்தில் நடிப்பதற்கு இதுதான் சரியான தருணம் என நினைக்கிறேன். ரசிகர்களுக் கண்டிப்பாக இந்தப் படம் பிடிக்கும்,” என்கிறார் வெங்கடேஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி