ஆனால், சென்சாருக்குப் போன அப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தனர். இதனால் வரிச்சலுகை கிடைக்காது என்பதால், படத்தில் உள்ள சில கிளாமர் காட்சிகளை கத்தரித்து விட்டு மீண்டும் சென்சாருக்கு அனுப்பினர் அப்போது யு/ஏ கொடுத்தனர். அப்போதும் திருப்திபடாத அவர்கள் மறுபடியும் சில காட்சிகளை கத்தரித்து விட்டு அனுப்ப, யு சான்றிதழ் கிடைத்து விட்டது.
அதுவரை அந்த படத்தை வாங்குவதற்கு முன்வந்த விநியோகஸ்ர்கள், படத்தில் இருந்த அனைத்து கமர்சியல் காட்சிகளையும் அவர்கள் நீக்கி விட்டதால் இப்போது படத்தை வாங்க மறுத்து ஒதுங்கி விட்டனர். இதனால் கமர்சியல் காட்சி வைத்தால் ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கிறாங்க, கமர்சியலை கத்தரித்தால் விநியோகஸ்தர்கள் ஓட்டம் பிடிக்கிறாங்க. இவங்க ரெண்டு பேரையும் திருப்திபடுத்துற மாதிரி எப்படி படம் எடுக்கிறதுன்னு தெரியலையே என்று அப்படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும் குழம்பிப்போய் நிற்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி