சென்னை:-பாலாவின் பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வேதிகா. பெரிய டைரக்டரின் படவாய்ப்பு என்பதால், தனக்கு தமிழில் இந்த படமே திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்தார் வேதிகா. இந்நிலையில், சித்தார்த்-பிருதிவிராஜ் நடிக்கும் காவியத்தலைவன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், பின்னர் படங்களே இல்லை. கஷ்டப்பட்டு ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். திடீரென்று உள்ளே புகுந்த வெளுத்துக்கட்டு அருந்ததி அந்த பட வாய்ப்பை அபகரித்து விட்டார். இதனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று புலம்பிக்கொண்டு நிற்கிறார் வேதிகா.
அதோடு, பாலாவின் இயக்கத்தில் இதுவரை நடித்த அபிதா, லைலா, சங்கீதா, பூஜா என எந்த நடிகைகளும் அதன்பிறகு சினிமாவில் வளரவில்லை. ஓரிரு படங்களோடு காலியாகி விட்டனர். அதனால் டைரக்டர் பாலா படங்களில் நடித்த கதாநாயகிகளுக்கு ஏற்பட்ட அதே கதி நமக்கும் ஏற்படப்போகிறதோ என்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் வேதிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி