புவனேஸ்வர்:-மணிக்கு 290 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட மேம்படுத்தப்பட்ட ‘பிரஹ்மோஸ்’ ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
300 கிலோ எடையுள்ள போராயுதங்களை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை முந்தைய ‘பிரஹ்மோஸ்’ ரக ஏவுகணைகளை காட்டிலும் வடிவமைப்பிலும், செயல்திறனிலும் மேம்படுத்தப்பட்டது ஆகும்.பறக்கும் குறியீட்டு இலக்கை பொருத்த வரை 3 மடங்கு கூடுதல் சக்தியுடனும், இயந்திர உந்து சக்தியில் முந்தைய ‘பிரஹ்மோஸ்’ ஏவுகணைகளை விட 9 மடங்கு அதிக ஆற்றலுடனும் சீறிப்பாய்ந்து செல்லும் இந்த ஏவுகணை, ஒடிசாவின் கடல் பகுதியில் இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு துறையின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி