இந்தியா வந்துள்ள இங்கிலாந்து நிதி மந்திரி ஜார்ஜ் ஆஸ்போன் இன்று இதுபற்றி தனது டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை அமைத்து கவுரவிக்க வேண்டும் என்று ஆஸ்போன் கூறியுள்ளார்.சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்தியை கடுமையாக ஏளனம் செய்து விமர்சித்த இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலைக்கு அருகில் காந்தி சிலை அமைய உள்ளது.
இங்கிலாந்து நிதி மந்திரி ஆஸ்போன் மற்றும் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து இதுதரப்பு வர்த்தகம் மற்றும் இந்திய சந்தைகளில் பிரிட்டிஷ் நிறுவனங்களின் வரவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி