சென்னை:-மோகன்லால், பாலச்சந்திரமேனன், சுரேஷ்கோபி போன்ற மலையாள நடிகர்களை வைத்து படம் இயக்கிய அசோக் ஆர்.நாத் ‘திருந்துடா காதல் திருடா’ படத்தை இயக்கி உள்ளார். திருந்துடா காதல் திருடா படத்தில் ஆதில் ஹீரோ, சுதக்ஷனா ஹீரோயின். ஜீபிநைனான். சஜீவ் பாஸ்கர், பிரவீன் ரவிச்சந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனைவரும் வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்பவர்கள். மலையாள நடிகர் முகேஷ், கொச்சு பிரேமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் உருவான விதம் பற்றி இயக்குனர் அசோக் ஆர்.நாத் கூறியதாவது: அரபு நாடுகளில் வாழும் இந்திய மக்கள் குறிப்பாக தமிழக. கேரள மக்கள் அங்கு சொகுசாக இருப்பதாக நினைக்கிறார்கள். சிலர்தான் அப்படி இருக்கிறார்கள். பெரும்பாலோனார் கஷ்டநிலையில்தான் இருக்கிறார்கள். அந்த உண்மையை ஒரு காதலின் வழியாக இந்தப் படம் பதிவு செய்கிறது. தப்பான காதல் கொள்ளும் ஒருவன் திருந்துவது காதல் கதையின் சாராம்சம். அரபு நாடுகளான துபாய், ஷார்ஜா, அலைன், ராசல்கைமா, அஜ்மான், உமல்-குவைன், யூஜோரா மாநிலங்களில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம். தமிழ், மலையாள மொழிகளில் தயாராகியுள்ளது. என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி