அப்பாவின் 150வது படத்தில் நான் நடிக்கப் போகிறேன். எனக்கான எந்த கேரக்டரும் படத்தில் இல்லையென்றாலும் இயக்குனரிடம் சொல்லி, ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குமாறு கேட்டுக் கொள்வேன். இப்படத்தை எங்களது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் என்னுடைய அம்மா தயாரிக்க உள்ளார். அனைத்தும் சரியாக நடந்தால் அப்பாவின் பிறந்த நாளன்று முறைப்படியான அறிவிப்பை வெளியிட உள்ளோம். படத்தைப் பற்றிய பல வதந்திகள் வெளியாகி வருகின்றன. யாராவது நல்ல கதையுடன் வந்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் செய்திகள் வந்தன. அப்படி நல்ல கதையாக இருக்கும் பட்சத்தில் நேரடியாக படப்பிடிப்புக்கு சென்று விடுவோம். ஒரு கோடியெல்லாம் ஒரு விஷயமே அல்ல என்கிறார் ராம் சரண் தேஜா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி