செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் லிங்கா படப்பிடிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு…!

லிங்கா படப்பிடிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு…!

லிங்கா படப்பிடிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு…! post thumbnail image
ரஜினி இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா ஜோடியாக நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் துவங்கியது. அங்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

இதையடுத்து படப்பிடிப்பை அங்கிருந்து ஐதராபாத்துக்கு மாற்றினர். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் ஐதராபாத் அருகே உள்ள அனாஜ்பூரில் படப்பிடிப்பு நடந்தது. அந்த கிராமத்தில் அரண்மனை அரங்கு அமைத்து ரஜினியும் இதர நட்சத்திரங்களும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்போது அங்குள்ள கிராமத்து மக்கள் திடீரென படப்பிடிப்பை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்பை நடத்தக்கூடாது நிறுத்துங்கள் என்று குரல் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

படப்பிடிப்பு நடத்துவதற்கு கிராம பஞ்சாயத்து துறை, மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனாலும் கிராம மக்கள் சமரசம் ஆக வில்லை. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பை எதிர்க்கும் அனாஜ்பூர் கிராமத்தினர் கூறும்போது, படப்பிடிப்பு நடத்த பெரிய அரண்மனை அரங்கு அமைத்துள்ளனர். அரசர் காலத்து கோட்டை, கொத்தளம், படைகள் போல் இதை மாற்றி உள்ளார்கள். அரங்கில் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் வர்ணம் பூச ரசாயன பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இந்த ரசாயனம் அருகில் உள்ள நீர் நிலையில் கலப்பதால் அதன் நிறம் மாறி வருகிறது. எனவே படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றனர்.

இதே கிராமத்தில் அனுஷ்கா, தமன்னா நடிக்கும் பாகுபலி படத்தின் படப்பிடிப்பு நடந்த போதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து படப்பிடிப்பை நிறுத்தினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி