இந்நிலையில், மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் துப்பாட்டாவால் தூக்குபோட்டு ஜியா கான் தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் ஏற்பட்டுள்ள தழும்புகளை வைத்து, அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, ஜியா கான் கடைசியாக நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சுராஜ் பஞ்சோலியுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்ததால் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பான விசாரணையை மும்பை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் ஜியா கானின் தாயார் ராபியா கேட்டுக் கொண்டதையடுத்து, இரு தினங்களுக்கு முன்னர் இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், சுராஜ் பஞ்சோலியின் பெற்றோரான ஆதித்யா பஞ்சோலி – ஜரினா வஹாப் தம்பதியர், தங்களது குடும்பத்தைப் பற்றி அவதூறாகவும், தரக்குறைவாகவும், கேவலமாகவும் தொடர்ந்து ‘டுவிட்டர்’ மூலம் கருத்து வெளியிட்டு வந்த மறைந்த ஜியா கானின் தாயார் ராபியா மீது மும்பை ஐகோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
தங்கள் குடும்பத்தாருக்கு சமூகத்தில் உள்ள அந்தஸ்தினை குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த ராபியா கான் 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பஞ்சோலி தம்பதியர் சார்பில் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ள வக்கீல் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி