டெர்பி :- இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடர் வரும் 9-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்திய அணி, டெர்பிஷைர் என்ற இங்கிலாந்து உள்ளூர் அணியிடம் 3 நாள் கொண்ட ஒரு பயிற்சி போட்டியில் மோதியது.
முதலில் பேட்டிங் செய்த டெர்பிஷைர் அணி முதல் நாடள் ஆட்ட முடிவில்ட 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் 2-வது இன்னிங்சில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா, பின்னி தலா 81 ரன்கள் எடுத்தனர்.
15 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய டெர்பிரைஷர் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர் முரளி விஜய் 41 ரன்னும், ரகானே 39 ரன்களும் சேர்த்தனர். 36.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டுமே இழந்து 143 ரன்கள் எடுத்து இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி