செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘தல’ படத்தின் டீசர் வெளியீடு…!

‘தல’ படத்தின் டீசர் வெளியீடு…!

‘தல’ படத்தின் டீசர் வெளியீடு…! post thumbnail image
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் ‘தல’யின் 55வது படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இதைத் தொடர்ந்து படத்தின் டீஸர் வேலைகளில் மூழ்கியுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன். டீஸர் ஸ்டைலாகவும், அதிரடியாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிக ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் டீஸர் எந்த தழுவலாகவோ, இல்லை சர்ச்சையாகவோ அமைந்து விடக் கூடாது என்பதிலும் தெளிவாக உள்ளனர் படக் குழுவினர். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

முதல் முறையாக அஜித், அனுஷ்கா, அஜித்-கௌதம் மேனன், அஜித்-ஹாரிஸ் ஜெயராஜ் என பல சிறப்பம்சங்கள் இப்படத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது..

அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் இப்படத்தின் டீஸர் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி