புதுடெல்லி:-அமெரிக்காவில் இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அமெரிக்க மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், அதன்மூலம் இரு நாடுகளும் பயனடையும் என்றும் மோடி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
உச்சிமாநாட்டின்போது செப்டம்பர் மாதம் மோடி அமெரிக்கா சென்று ஒபாமாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் வாண வேடிக்கைகள், அணிவகுப்புகள், விருந்துகள், திருவிழாக்கள், கண்காட்சிகள், சுற்றுலாக்கள், இசைக் கச்சேரிகள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி