தனுஷின் ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’, ‘மான் கராத்தே’ மற்றும் ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தன. இதனால் சமீப காலமாக அனிருத்திற்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கமும் உடையவர் அனிருத். தற்போது அனிருத்தின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.
ஆரம்பித்து மிகக்குறுகிய காலங்களில் அதிக லைக்குகள் பெற்றவர்கள் வரிசையில் தற்போது அனிருத்தும் இடம்பிடித்துவிட்டார்.இந்தியாவில் ஒரு இசையமைப்பாளர் இவ்வளவு ஆதரவுகளைப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.
இதுகுறித்து , அனிருத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ”எனக்கு லைக்குகள் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி ” என தெரிவித்துள்ளார்’.
தற்போது விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் , ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஐ’ படத்தில் ஒரு பாடல் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி