சென்னை:-முருகதாஸ் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார்.இந்தநிலையில், அடுத்து அவர் விஜய்-அஜீத் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் பரவியுள்ளன. அவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர் மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுதான்.
ஆனால் அவர் அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கயிருப்பதால், இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு அமையவில்லை.இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ், அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய்-அஜீத் இருவரையும் வைத்து படம் இயக்குவது அவ்வளவு சுலபம் அல்ல. அப்படி அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க சம்மதித்தால் அந்தப்படத்தை இயக்க நான் தயார் இரண்டே மாதங்களில் கதை ரெடி பண்ணிவிடுவேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி