உடுப்பி மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரியான டாக்டர் ராமச்சந்திர பயிரி கூறுகையில், உடுப்பி தாலுகாவில் மட்டும் 22 பேர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், அவர்களில் நான்கு பேர் பலியானதாகவும் கூறியுள்ளார். அம்மாவட்டத்தில் உள்ள கரகலா பகுதியில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், குந்தப்பூர் பகுதியில் சிகிச்சை பெற்று வந்த 15 பேரில் இருவர் உயிரிழந்ததாக அவர் மேலும் கூறினார்.
எனினும் இந்நோயை சமாளிக்க மாவட்ட மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் கையிருப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதே போல் இந்நோயால் யாராவது பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அனைத்து மருத்துவனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி