செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் கடலுக்கடியில் 31 நாட்கள் வசித்து அமெரிக்கர் சாதனை!…

கடலுக்கடியில் 31 நாட்கள் வசித்து அமெரிக்கர் சாதனை!…

கடலுக்கடியில் 31 நாட்கள் வசித்து அமெரிக்கர் சாதனை!… post thumbnail image
இஸ்லாமொராடா:-பிரபல கடல் ஆராய்ச்சியாளரான ஜேக்கஸ் கவுஸ்ட்டேவின் பேரனான பேபியன் கவுஸ்ட்டே கடலுக்கு அடியில் 31 நாட்கள் வசித்து சாதனை படைத்துள்ளார். புளோரிடாவில் 63 அடி ஆழத்தில் உள்ள ஆய்வகத்தில் 31 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்த அவர், தனது குழுவினருடன் காலை 10 மணியளவில் தரைக்கு வந்தபோது பலத்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டார். இதன் மூலம் 46 வயதான பேபியன், 30 நாட்கள் கடலுக்கடியில் வசித்த தனது தாத்தாவின் சாதனையை முறியடித்தார்.

தனது சாகசங்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக பேபியன் கூறியுள்ளார். கடந்த ஜுன் 1ம் தேதி சாகச ஆய்வுப்பயணத்தை தொடங்கிய அவருக்கு விஞ்ஞானிகள் தினமும் சீதோஷ்ண நிலை குறித்த விவரங்களையும், கடல் அமிலமாதல் குறித்த தகவலையும் தந்து கொண்டிருந்தனர். தனது கடல் வாழ்க்கையை முடித்து தரைக்கு திரும்பிய பேபியன் கூறுகையில், 1960 ஆம் ஆண்டு கடலுக்கு கீழே 30 நாட்கள் வசித்து சாதனை படைத்த எனது தாத்தாவுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி