சென்னை:-அஜித் ஜோடியாக ‘உன்னைத் தேடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி கதாநாயகியாக வரமுடியவில்லை. இருந்தாலும் பல ரசிகர்களைக் கவர்ந்த ஒரு நாயகியாக இருந்தார். அதன் பின் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று நடிப்பதிலிருந்தே விலகினார்.
தற்போது மீண்டும் நடிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாராம். அதைத் தொடர்ந்து கோலிவுட்டில் உள்ள நண்பர்களுக்கு நடிக்கும் முடிவை தெரிவித்திருக்கிறாராம். பழைய நண்பர்கள் தனக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறார். மாளவிகா அனைவருடனும் எளிமையாகப் பழகும் குணம் கொண்டவர் என்பதால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சுலபமாகவே இருக்கும் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி