அதோடு படத்தையும் அறிமுக இயக்குனர் காளிரங்கசாமி என்பவர்தான் இயக்குகிறார். இவர் இயக்குனர் எழிலிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். மேலும் ‘பாகன்’ படத்தில் அஸ்லம் அவர்களிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார் காளிரங்கசாமி. ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘வழக்கு எண் 18/9′ படத்தில் நடித்த மனீஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகேஷ்முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘காதல்’ படத்தின் இசையமைப்பாளார் ஜோஷ்வா ஸ்ரீதர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
நாயகனாக அறிமுகமாவது பற்றி தினேஷ் கூறும்போது, மிக அழுத்தமான எனக்கும் பொருத்தமான கதை என்பதால் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதற்கு முன் நிறைய பேர் என்னை நடிக்க அழைத்தபோதெல்லாம் மறுத்துவிட்டேன். ஆனால் இந்தக் கதை என்னை நடிப்புக்குள் இழுத்து வந்துவிட்டது. நடனத்தையும் தொடர்ந்து கொண்டு, கிடைக்கிற இடைவெளியில் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறேன். தினேஷ் மாஸ்டர் இனிமே ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கிறார்னு கொளுத்திப் போட்டா யாரும் நம்பிடாதீங்க. நமக்கு டான்ஸ் பொழப்பு ரொம்ப முக்கியம் பாஸ் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி