கடந்த ஆண்டு வெளிவந்த பாலிவுட்டியோட நாமத்தில் என்ற படம்தான் மம்முட்டி கொடுத்த கடைசி ஹிட். அதன் பிறகு நடித்த இம்மானுவேல், குஞ்சானந்தண்டே கதா, படங்கள் ஆவரேஜ் ரிசல்ட். ஆனால் அதற்கு பிறகு வந்த கம்மத் அண்ட் கம்மத், கடல் கடந்து ஒரு மாத்துக்குட்டி, தெய்வத்திண்ட சொந்தம், கிளிட்டஸ், சைலன்ஸ், பால்யகால சகி, பிரைஸ் தி லார்ட், சமீபத்தில் வெளிவந்த கேங் ஸ்டார் உள்பட அத்தனை படங்களும் தோல்வி அடைந்தது.
பொதுவாக மம்முட்டி புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பார். சமீபத்தில் தோல்வி அடைந்த படங்களில் பெரும்பாலானவை புதியவர்கள் இயக்கியதே. அதனால் இனி புதியவர்கள் படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி