அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!…

காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!…

காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!… post thumbnail image
அகமதாபாத்:-தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக தொழில் செய்து வந்த மகாத்மா காந்தி அங்கு கறுப்பின மக்கள் மீது வெள்ளையர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்து போராடினார். அதே தாக்கத்தோடு தனது தாயக மக்களுக்கு வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தரும் நோக்கத்தில் அவர் 1915ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தார்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 7,8,9 ஆகிய தேதிகளை ப்ரவாசி பார்தி திவாஸ் (அயல் நாடுகளில் வாழும் இந்தியர்கள் திருவிழா) என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். அந்நாட்களில் அவர்கள் தாயகத்துக்கு திரும்பியோ, அல்லது, தாங்கள் இருக்கும் நாடுகளில் இருந்தபடியோ இந்த திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம்.

வரும் 2015ம் ஆண்டுடன் காந்தி இந்தியாவுக்கு திரும்பி வந்து 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை நினைவுகூரும் விதத்தில் இந்த ஆண்டின் ப்ரவாசி பார்தி திவாஸ் விழாவை வெகு சிறப்பாக கொண்டாட காந்தி பிறந்த குஜராத் மாநில அரசு ஏற்பாடு செய்து வருவதாக அம்மாநில நிதி மந்திரி சவ்ரப் படேல் அறிவித்துள்ளார்.குஜராத் சட்டசபையில் மாநில பட்ஜெட்டினை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி திரும்பி வந்த 100-வது ஆண்டு விழாவினை காந்திநகர் பகுதியில் உள்ள மஹாத்மா மந்திரில் வெகு சிறப்பாக கொண்டாட மாநில அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி