அப்போது அவருடன் இங்கிலாந்தின் பிரபல முன்னாள் கால்பந்து வீரட் டேவிட் பெக்காம் மற்றும் கோல்ப் வீரர் இயான் பௌல்டர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.அப்போது வி.ஐ.பி. இருக்கையில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று ஷரபோவா நினைவு கூறுகையில், அவருக்கு மிகவும் மிடித்தவரும் பழக்கமுடைய பெக்காம் இருந்தார் என்றுள்ளார். ஆனால் அவர் அருகில் இருந்த தெண்டுல்கரை அவர் கூறவில்லை.
இதுகுறித்து ஒருவர் ஷரபோவாவிடம் பெக்காம் அருகில் தெண்டுல்கர் இருந்தார் அல்லவா? என்று கேட்டார். அதற்கு ஷரபோவா தெண்டுல்கர் யாரென்று எனக்கு தெரியாது என்று பதில் அளித்துள்ளார்.பெக்காம் குறித்து ஷரபோவா கூறுகையில்,நான் இரண்டு மூன்று தடவை பெக்காமை சந்தித்துள்ளேன். அவர் ஒரு நல்ல மனிதர். சிறந்த கால்பந்து வீரர். பழகுவதற்கு நல்ல மனிதர். பார்க்கும்போது ஹலோ, வாழ்த்துக்கள் என்று கூறிக்கொள்வோம். ஆனால் நாங்கள் இரண்டு பேரும் சிறந்த நண்பர்கள் அல்ல என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி