சமீபத்தில் வெளியாகிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இன்றைய இளைய சமூகத்திற்கேற்றாற்போல், அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்களை திரையில் புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கும் பெங்களூர் டேய்ஸ் படத்திற்கு தினம் தினம் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மலையாள மொழி புரியாவிட்டாலும் சப் டைட்டிலை வைத்தே படத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை வாங்க பலர் போட்டி போட்டு வந்தனர். தற்போது பி.வி.பி. சினிமா நிறுவனமும், பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தரான தில் ராஜுவும் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரிக்கவுள்ளார்கள்.தமிழில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கிய பாஸ்கரன் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கவுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி