சென்னை-28, சுப்பிரமணியபுரம், கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, ஆகியவை வெற்றிப் படங்கள் இவை அனைத்திலும் மற்ற ஹீரோக்களுடன் ஜெய் நடித்திருக்கிறார். ஆனால் அவர் தனி ஹீரோவாக நடித்த வாமணன், அதே நேரம் அதே இடம், அவர் பெயர் தமிழரசி, கனிமொழி, நவீன சரஸ்வதி சபதம், ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை.
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்துள்ள வடகறி பரவாயில்லை. அடுத்து ஜெய் நடித்த திருமணம் எனும் நிக்காஹ் வெளிவரவேண்டியது இருக்கிறது. இந்தப் படத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அர்ஜுனன் காதலி, தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், வலியவன் ஆகிய படங்களிலும் ஜெய் சோலோ ஹீரோவாக நடித்து வருகிறார். சோலோவாக ஜெய் ஜெயிப்பாரா என்பது இந்த படங்களின் ரிலீசுக்கு பிறகே தெரியவரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி