அப்படத்தில் அவரது இசைப்பணி திருப்தியை கொடுக்கவே இப்போது தான் நடித்து வரும் உத்தமவில்லன் படத்திற்கும் ஜிப்ரானையே ஒப்பந்தம் செய்து விட்டார்.
இந்நிலையில், ஆர்யா தயாரித்துள்ள அமரகாவியம் படத்திற்கும் ஜிப்ரான்தான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடந்தபோது ஜிப்ரானின் இசையை அந்தவிழாவுக்கு வந்திருந்த அனைத்து இயக்குனர்களும் ஜிப்ரானின் இசையை புகழ்ந்து தள்ளி விட்டனர்.
அதிலும் கமல் சார் தனது ஒரு படத்திற்கு இசையமைக்க அழைத்ததே பெரிய விசயம் அப்படியிருக்க இரண்டாவது படத்துக்கும் உடனடியாக கமிட் பண்ணியிருககிறார் என்றால் கோலிவுட்டின் அடுத்த ஏ.ஆர்.ரகுமான் ஜிப்ரான்தான் என்று பேசினார்கள்.இதனால் சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போயிருந்த ஜிப்ரான், அதையடுத்து மேடைக்கு பேச வந்தவர், என்ன பேசுவதென்றே தெரியாமல் திணறியவர், கமல் சார் கொடுத்திருப்பது எனக்கு பெரிய அங்கீகாரம்தான். இதை காப்பாற்றும் வகையில் அடுத்தடுத்து இசையமைப்பேன் என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி