செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!… post thumbnail image
சியோல்:-சமீப காலமாக வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த வாரம் குறைந்த தூரம் சென்று பாய்ந்து தாக்க கூடிய 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்நிலையில் நேற்று மீண்டும் குறைந்த தூரம் அதாவது 180 கி.மீட்டர் தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணை சோதனை நடத்தியது.

இச்சோதனை கிழக்கு கடற்கரை பகுதியில் நடத்தப்பட்டது. இதற்கு தென் கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. சீன அதிபர் ஸி ஜின்பிங் நாளை தென் கொரியா தலைநகர் சியோல் வருகிறார். அப்போது அந்நாட்டு அதிபர் பார்க் ஷியூன் ஹையை சந்தித்து பேசுகிறார். அதில் வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள வட கொரியா ஏவுகணைகளை வீசி சோதனை நடத்துவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி