சென்னை:-கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘ஷட்டர்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. லால், சீனிவாசன், சஜிதா நடித்திருந்தனர். ஜாய் மேத்யூ இயக்கி இருந்தார்.துபாயில் வேலை பார்த்து திரும்பிய ஒருவர், ஒரு சினிமா இயக்குனர், ஒரு ஆட்டோ டிரைவர் இந்த மூவரை சுற்றி நடக்கும் கதை. இதனை மராட்டிய மொழியில் ரீமேக் செய்திருக்கிறார்கள். தமிழில் இயக்குனர் விஜய் ரீமேக் செய்ய இருக்கிறார்.
ஷட்டரின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி இருப்பது உண்மை. அதை நான் எனது கம்பெனியில் தயாரிக்க இருக்கிறேன். இயக்குவது சம்பந்தமாக முடிவு செய்யவில்லை. எல்லாமே ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. இதுபற்றி இன்னும் சில வாரங்களில் முறைப்படி அறிவிக்கிறேன் என்கிறார் விஜய். என்றாலும் விஜய் இயக்கப்போவது உறுதி அதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி