சென்னை:-5 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்கள் நடிக்கும் புதிய படம் ‘அஞ்சலி அந்நியன் மற்றும் பசங்க’. சிறுவர்களுடன் பிரதாப், ஸ்ருதிராஜ், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்கள். எஸ்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரஷாந்த் இசை அமைக்கிறார்.
சிறுவர்களின் உலகம் முன்புபோல இல்லை. அது மிகவும் மாறி இருக்கிறது. பெரியவர்கள் அளவுக்கு சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். பத்து வயதில் பைக் ஓட்டுகிறார்கள். 15 வயதில் கார் ஓட்டுகிறார்கள். இந்த மாற்றம் செய்வது என்ன. இந்த வயதில் அவர்கள் எடுக்கும் சில முடிவுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று காட்டுகிற படம். மற்ற சிறுவர்கள் படத்திலிருந்து நிச்சயம் இது வித்தியாசமானதாக இருக்கும். கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம் என்கிறார் படத்தின் இயக்குனர் எம்.ஜெஸ்வர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி