செய்திகள்,திரையுலகம் சீனாவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம்!…

சீனாவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம்!…

சீனாவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம்!… post thumbnail image
மும்பை:-கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான தூம் 3 வசூலில் சாதனை படைத்தது. அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்க அவரை விட பெரிய நடிகரான அமீர்கான் வில்லனாக நடித்தார். கத்ரினா கைப் ஹீரோயின். ஆதித்யா சோப்ரா தயாரிக்க விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கி இருந்தார். இந்தியாவில் வசூல் சாதனை படைத்த தூம் 3 அடுத்த மாதம் சீனாவில் ரிலீசாகிறது.

இதன் மூலம் சீனாவில் முறைப்படி ரிலீசாகும் முதல் இந்தியப்ப டம் என்ற பெருமையை தூம் 3 பெற்றிருக்கிறது. பொதுவாக சீனாவில் இந்திய படங்கள் திரையரங்குகளில் ரிலீசாவதில்லை. டிவிடியாக மட்டுமே கிடைக்கும். அதையும் இந்தியர்களே வாங்கிச் சென்று பார்ப்பார்கள். ஒரு டிவிடியின் மதிப்பு இந்திய பணத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். சீனாவில் சீன படங்கள் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரிலீசாகும். சீனாவின் தணிக்கை குழு மிகவும் கடுமையானது. தங்கள் நாட்டின் சட்டதிட்டத்தை மதிக்காத குறிப்பாக கம்யூனிசத்தை கிண்டல் செய்யும் படங்களையோ, பாலுணர்வை தூண்டும் படங்களையோ அனுமதிக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட நாட்டில் முதன் முறையாக தூம் 3 ரிலீசாகிறது. இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் பல படங்கள் ரிலீசாகும் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி