செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை கால்பந்து:மெக்சிக்கோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து!…

உலக கோப்பை கால்பந்து:மெக்சிக்கோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து!…

உலக கோப்பை கால்பந்து:மெக்சிக்கோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து!… post thumbnail image
ரியொ டி ஜெனிரோ:-உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘நாக்–அவுட்’ சுற்றில் மெக்சிக்கோ அணியை எதிர்கொண்டது நெதர்லாந்து.ஆட்ட நேரத்தின் முதல்பாதியில் நெதர்லாந்து வீரர்களின் அசத்தலான ஆட்டத்தை தடுத்தாட்கொண்ட மெக்சிக்கோ அணியினர் இடைவேளை வரை கோல்களை அடிக்க விடாமல் சாமர்த்தியமாக விளையாடினர்.

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோ தரப்பில் 48வது நிமிடத்தில், ஜியோவானி டாஸ் சான்டோஸ் முதல் கோலினை பதிவு செய்தார்.பின்னர், ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்ள 88வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பில் ராபென் அடித்த பந்தை ஹன்டலார் தலையால் முட்டினார். சம்யோஜிதமாக அந்த பந்தினை நெதர்லாந்தின் வெஸ்லி ஸ்னைடர் வலையை நோக்கி அடிக்க இரு அணிகளும் 1–1 என்ற சமநிலையை அடைந்தன.

பின்னர், ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் மெக்சிகோவின் மார்க்கஸ் நெதர்லாந்து வீரர் ராபெனை தேவையில்லாமல் மடக்கியதால் ‘பெனால்டி’ கொடுக்கப்பட்டது. பெனால்டியில் ஹன்டலார் அடித்த கோலால் 2–1 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி