ஆட்டத்தின் 80–வது நிமிடத்தில் இத்தாலி பின்கள வீரர் சிலினியின் தோள்பட்டையில் சுராஸ் கடித்தார். டெலிவிசன் ரீபேளயில் இத்தாலி வீரரை அவர் கடிப்பது தெளிவாக தெரிந்தது. நடுவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது அதை அவர் கவனிக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் பாதிக்கப்பட்ட சிலினியன் கடித்த பகுதியில் காயம் ஏற்பட்டதை காண்பித்தார்.இதையடுத்து இந்த விவகாரம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிபாவின் ஒழுங்கு நடவடிக்கை குழுவும் சுராஸ் மீது அதிகாரபூர்வமான குற்றச்சாட்டை தெரிவித்தது.
இதையடுத்து 4 மாதம் கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளிலும் சுராஸ் கலந்துகொள்ளக் கூடாது என்று பிபா இன்று தடை விதித்தது. இதனால், உலகக் கோப்பை தொடரில் அடுத்து வரும் 9 போட்டிகளிலும் அவர் விளையாட முடியாது. மேலும் பிரீமியர் லீக் தொடரிலும் முதல் 9 போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி