செய்திகள்,திரையுலகம் கடலுக்கு அடியில் தேனிலவு கொண்டாடிய விஜய், அமலாபால் ஜோடி!…

கடலுக்கு அடியில் தேனிலவு கொண்டாடிய விஜய், அமலாபால் ஜோடி!…

கடலுக்கு அடியில் தேனிலவு கொண்டாடிய விஜய், அமலாபால் ஜோடி!… post thumbnail image
சென்னை:-நடிகை அமலாபால், இயக்குனர் விஜய் இருவரும் கடந்த 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமான கையோடு தேனிலவு பயணமாக மாலத்தீவு சென்று வந்திருக்கிறார்கள். அங்கு ஸ்கூபா டைவிங் எனப்படும் கடலுக்கு அடியில் நீந்திச் செல்லும் அட்வென்ஜெர் விளையாட்டில் கலந்து கொண்டு தேனிலவை கொண்டாடியிருக்கிறார்கள்.

இதுபற்றி அமலாபால் கூறியிருப்பதாவது: மாலத்தீவு எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று. இங்குள்ள அட்வென்ட்ஜர் விளையாட்டுக்கள் ரொம்ப பிடிக்கும். பலமுறை சென்று விளையாடியிருக்கிறேன். சின்னதா ஒரு தேனிலவு டிரிப் போகலாமுன்னு முடிவு பண்ணினோம். என்னோட சாய்ஸ்சா மாலத்தீவு இருந்தது. அங்கு ஸ்பா டைவிங் போனோம். அவருக்கு ஸ்கூபா டைவிங் புதுசு. நான்தான் அவருக்கு கற்றுக் கொடுத்தேன். கடலுக்கு அடியில் தனிமையில் அங்குள்ள ஜீவராசிகளுடன் பொழுதை கழிப்பது அற்புதமான அனுபவம். இனி நேரம் கிடைக்கும்போது அடிக்கடி அங்கு செல்வோம் என்றார்.

விஜய் கூறும்போது, எனக்கு ஸ்கூபா டைவிங் போக ஆசையாக இருக்கும். துணைக்கு ஆள் இல்லாமல் தனியாக போய் வர பயம். இப்போது பழகி விட்டது. இனிமையான அனுபவமாக இருந்தது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி