ஜம்மு:-ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் பனிலிங்கத்தை காண முதல் குழுவாக 1160 யாத்திரிகர்கள் இன்று அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். இருப்பினும் பனிக்கட்டி குவியல்கள் காரணாமாக பயணம் செயவதில் சிரமம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஒரு நல்ல செய்தியாக, 20 அடி பனி லிங்கம் காணமுடியும் என்றும் இருப்பினும் கடுமையான பனி காரணமாக பஹல்காம் பாதையில் யாத்திரிகர்கள் சிரமங்களை மேற்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கத்துவாவில் இருந்து ஜம்மு நெடுஞ்சாலையில் பல்வேறு பாதுகாப்புகள் யாத்திரிகர்களுக்ககா செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி