தைவான்:-தைவான் நாட்டை சேர்ந்தவர் ஸ்காட் வேரிங். இவர் கடந்த வாரம் யூ டியூபில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், வேற்று கிரகவாசி ஒன்று தனது தலையை உயர்த்தி சுற்றி பார்ப்பது தெரிகிறது. வேற்று கிரகவாசிகளை குறித்த தேடலில் ஈடுபட்டு வருபவர் வேரிங்.
கூகுள் எர்த்தில் அவர் பார்த்தவற்றை குறித்து வீடியோவில் கூறும்போது, நேற்று இரவு நான் சற்று கவனமுடன் உற்று பார்த்தேன். அது வழக்கமான வேற்று கிரகவாசி போன்று இல்லை. உருண்டையான தலை கொண்ட ஒரு பொருள் இருந்தது.உயரமான பகுதியில் இருந்து அது வெளியே நீட்டி கொண்டு இருந்தது. அது பார்ப்பதற்கு தலை போன்று எனக்கு தோன்றியது.
அது பயணம் செய்த பறக்கும் தட்டின் உள்ளே இருந்து தனது தலையை உயர்த்துவது போன்று தெரிந்தது. அந்த வடிவம் பெரிய மண்டையோடு போன்று இருந்தது. ஒரு பெரிய தலை சிறிய கன்ன பகுதி ஆகியவற்றை அது கொண்டு இருந்தது என்று கூறியுள்ள அவர் அதனை பார்ப்பதற்கான வழிகாட்டி முறைகளையும் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Like this:
Like Loading...
தொடர்புடையவை:-

அமெரிக்கா:-அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எஸ்.ஈ.டி.ஐ. எனப்படும் வேற்று கிரகவாசிகளை கண்டறியும் அமைப்பை சேர்ந்தவர் சேத் சொஸ்தக்.இவர், இன்னும் 20 ஆண்டுகளில் அல்லது அதற்கு முன்பாக வேற்று கிரகவாசிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து விட கூடும் என கூறினால் அது மிகையாகாது என்று அமெரிக்க பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்த அமைப்பானது, விண்வெளி வீரர் மற்றும் எழுத்தாளருமான கார்ல் சகன் என்பவருடன் இணைந்து தொடங்கப்பட்டது. இரு நோபல் பரிசு வென்றவர்களும் இங்கு பணியாற்றியுள்ளனர்.…

லண்டன்:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சமந்தா மெக்டொனால்டு என்ற பெண் தன்னை ஏலியன்ஸ் கடத்த முயற்சித்தனர் என அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு உள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது, கடந்த 1990ம் ஆண்டில் இருந்து வேற்று கிரகவாசிகள் தன்னை வந்து பார்த்துள்ளனர். ஆனால், என்னால் அந்த அனுபவத்தை நினைவுபடுத்தி பார்க்க முடியவில்லை. எனது நினைவில் இருந்து அவை நீங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால், தூங்கி எழும்போது, ஊசி போட்ட அடையாளம் உள்ளிட்ட…

வாஷிங்டன்:-பூமியை போன்று வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வருகிறார்கள் என கதை போன்று தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்து பல ஹாலிவுட் சினிமா படங்களும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில், வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. நாசாவும் அதன் பங்கு நிறுவனங்களின் நிபுணர்கள் இணைந்து விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள ‘ரோடு– மேப்’ அமைந்துள்ளனர். அதன்…