சென்னை:-நடிகர் விஷ்ணு சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பரும், இயக்குனருமான நட்ராஜின் மகள் ரஜினியை திருமணம் செய்து கொண்டுள்ளார். ரஜினிக்கு சினிமா இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் லட்சியம்.
இதற்காக அவர் கிருத்திகா உதயநிதி இயக்கிய வணக்கம் சென்னை படத்திலும், சீனு ராமசாமியுடன் நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி பயிற்சி எடுத்துள்ளார். விரைவில் அவர் படம் ஒன்றை இயக்க இருக்கிறார் அதில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் விஷ்ணு.
இதுகுறித்து விஷ்ணு கூறியிருப்பதாவது:-என் மனைவி இயக்கும் படத்தில் நான்தான் ஹீரோவாக நடிக்கிறேன். முதலில் அவர் இரண்டு கதைகள் தயார் செய்து வைத்திருந்தார். அந்த சாயலில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வந்து விட்டது. தற்போது வேறு கதை எழுதிக் கொண்டிருக்கிறார். அடுத்த வருடம் படம் இயக்குவார் அதில் நான் நடிக்கிறேன். என்றார் விஷ்ணு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி