செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இன்று ஒருநாள் சினிமா படப்பிடிப்புகள் ரத்து!…

இன்று ஒருநாள் சினிமா படப்பிடிப்புகள் ரத்து!…

இன்று ஒருநாள் சினிமா படப்பிடிப்புகள் ரத்து!… post thumbnail image
சென்னை:-பிரபல சினிமா டைரக்டர் ராம நாராயணன் நுரையீரல் கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்குகள் நடந்தபின், இன்று பிற்பகல் 2-30 மணி அளவில் ராம நாராயணன் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

ராம.நாராயணன் மறைவையொட்டி, சென்னையில் இன்று சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரைப்படம் தொடர்பான அனைத்து வேலைகளும் நடைபெறாது என்றும், இதற்கு திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒத்துழைப்பு தருகின்றன என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி