இந்திய கதிர்வீச்சியல் துறை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் பவின் ஜன்க்காரியா கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் ‘புற்று நோயையும், செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சையும் சிலர் அடிப்படையே இல்லாமல் தொடர்புப்படுத்தியதால் மக்களிடையே இத்தகைய பீதி நிலவுகிறது.செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது என்று கண்டறியப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.
இதே கருத்தை வலியுறுத்தி பேசிய இந்திய செல்போன் சேவையாளர்கள் சங்க இயக்குனர் ராஜன் மேத்யூஸ், ‘இது தொடர்பாக நடத்தப்பட்ட அறிவியல்பூர்வமான ஆய்வுகளில் இந்த கதிர்வீச்சினால் மனித ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை’ என்று கூறினார்.அதிக உபயோகத்துக்கு ஏற்ப, இந்த கதிர்வீச்சினால் அப்பகுதியின் வெப்பநிலை மட்டுமே உயரும் என ரசாயன ஆய்வியல் துறை பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.பொதுவாக, செல்போனால் புற்று நோய் உருவாகக் கூடும் என்ற கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ள கதிர்வீச்சு துறை சார்ந்த நிபுணர்கள், இந்த கதிர்வீச்சால் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் கருவுக்கும் கூட எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி