செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலகக்கோப்பையில் 100வது கோலை அடித்தார் நெய்மர்!…

உலகக்கோப்பையில் 100வது கோலை அடித்தார் நெய்மர்!…

உலகக்கோப்பையில் 100வது கோலை அடித்தார் நெய்மர்!… post thumbnail image
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மரின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. பிரேசிலை சேர்ந்த 22 வயதான அவர் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தார். கேமரூனுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து நெய்மர் முத்திரை பதித்தார். அவரது இந்த கோல்கள் பிரேசிலின் அபார வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

இதன் மூலம் அவர் இந்த உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். 3 ஆட்டத்தில் விளையாடி 4 கோல்கள் அடித்துள்ளார். தாமஸ் முல்லர் (ஜெர்மனி), கரீம் பென்சிமா (பிரான்ஸ்), வான்பெர்சி, ரோபன் (நெதர்லாந்து), ஹலன்சியா (ஈக்வடார்) ஆகிய 5 வீரர்கள் தலா 3 கோல் அடித்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

நெய்மர் நேற்று முதல் கோலை அடித்தது இந்த உலக கோப்பையின் 100வது கோலாகும். 36 ஆட்டத்தில் மொத்தம் 108 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சராசரி 3 ஆகும். கடந்த உலக கோப்பை போட்டியில் 36 ஆட்டத்தில் 77 கோல்கள்தான் அடிக்கப்பட்டன.
47 ஆட்டத்தில்தான் 100 கோல்கள் அடிக்கப்பட்டன. இந்த உலக கோப்பையில் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால்தான் 36 ஆட்டங்களில் 100 கோல்களை எடுக்க முடிந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி