ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ‘எந்திரன் 2’ படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சந்தேகம்தான் என்கிறார்கள். அதற்குக் காரணம் ரஜினிகாந்தின் உடல்நிலைதான்.
ரஜினிகாந்த் அவருடைய உடலை வருத்திக் கொண்டெல்லாம் நடிக்கக் கூடாது என டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கேற்றபடிதான் ‘லிங்கா’ படத்திலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் காட்சிகளை அமைத்திருக்கிறாராம். சண்டை காட்சிகளே, அதிரடியான காட்சிகளே அந்தப் படத்தில் இல்லவே இல்லையாம். அதனால்தான் ரஜினிகாந்தும் அப்படத்தில் நடிக்க சம்மதித்தாராம்.
ஆனால், ‘எந்திரன் 2’ படத்தில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம் பெற உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் அம்மாதிரியான காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
அதனால்தான் ரஜினிகாந்த் ‘கோச்சடையான்’ படத்தில் கூட மோஷன் கேப்சரிங் என்பதால்தான் நடித்தார். இல்லையென்றால் பூஜையுடன் நின்று போன ‘ராணா’ படத்தில் மீண்டும் நடித்திருப்பார் என்கிறார்கள். எனவே, ‘எந்திரன் 2’ படத்தில் ரஜினி நடிப்பதில் சிக்கல் இருக்கும் எனத் தெரிகிறது. இது பற்றி ரஜினிகாந்த் விரைவில் முடிவெடுப்பார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி