மலேசியா:-மதம் தொடர்பான விசயங்களில் அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மலேசிய நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த அல்லா என்ற வார்த்தைக்கு அரசு விதித்த தடையை எதிர்த்து கத்தோலிக்க சர்ச் ஒன்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்த கிறித்துவ சமுதாயத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இது குறித்த விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த மலேசிய நீதிமன்றம், மதம் குறித்த விசயங்களில் அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இதனால், முஸ்லிம்கள் அதிகம் வாழும் அந்நாட்டில் மதம் தொடர்பாக எழுந்துள்ள பதற்றம் தணிந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி