செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை கால்பந்து: கேமரூனை வீழ்த்தி பிரேசில் வெற்றி!…

உலக கோப்பை கால்பந்து: கேமரூனை வீழ்த்தி பிரேசில் வெற்றி!…

உலக கோப்பை கால்பந்து: கேமரூனை வீழ்த்தி பிரேசில் வெற்றி!… post thumbnail image
பிரேசிலியா:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடந்த ஆட்டத்தில் பிரேசில் அணி கேமரூன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.முதல் பாதி ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் பிரேசிலின் பாலின்ஹோ அடித்த பந்தை கேமரூனின் நியோம் கோல் விழாமல் தடுத்தார். 11வது நிமிடத்தில் கேமரூனின் எனோஹ் பவுல் செய்தார். அவருக்கு மஞ்சள் அட்டையும் நடுவரால் காண்பிக்கப்பட்டது. 17வது நிமிடத்தில் பிரேசிலின் நெய்மார் தனது அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.

26வது நிமிடத்தில் கேமரூனின் மேடிப் முதல் கோலை அடித்து கோல் கணக்கை சமன் செய்தார். 35வது நிமிடத்தில் மீண்டும் நெய்மார் அற்புதமான கோல் அடித்து அணியின் கோல் எண்ணிக்கையை 2 ஆக உயர்த்தினார். இந்த நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிந்தது. சிறிது நேர ஓய்வுக்கு பின் மீண்டும் 2வது பாதி ஆட்டம் தொடங்கியது. 49வது நிமிடத்தில் பிரேசிலின் பிரெட் 3வது கோல் அடித்தார்.

86வது நிமிடத்தில் பிரேசிலின் பெர்னான்டின்ஹோ தனது அணிக்கு 4வது கோலை பதிவு செய்தார். இரண்டாவது பாதியில் மேற்கொண்டு கோல் எதுவும் விழாததால் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக பிரேசிலின் முன் கள ஆட்டக்காரரான நெய்மார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி