சென்னை:-பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான இராம. நாராயணன் சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு அவர் மரணமடைந்தார். அவரது உடல் செவ்வாய் அன்று தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்த அவர், தமிழ் மற்றும் இதர தென்னிந்திய மொழிகளில் 113 திரைப்படங்களை இயக்கியுள்ளார். மிருகங்களை பயன்படுத்தி நிறைய பக்தி படங்களையும் அவர் எடுத்துள்ளார்.
சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தையும் இவர் தயாரித்துள்ளார். இவரது படைப்பில் ஆடி வெள்ளி, ராஜ காளியம்மன் ஆகிய படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளன. மேலும் இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி