விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து வருகின்றன. அங்கு விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பூமியில் இருந்து அடிக்கடி விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு இங்கே உள்ளது போல எல்லா வகையான உணவுப்பொருட்களும் வழங்கப்படுவது இல்லை. அவர்களுக்கென பிரத்யேக முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது.அந்தவகையில் அங்கு தங்கியிருக்கும் வீரர்கள் சூடான காபி குடிப்பதற்காக காபி தயாரிக்கும் எஸ்பிரசோ எந்திரம் ஒன்றை அனுப்ப இத்தாலி முடிவு செய்துள்ளது.
இத்தாலி விண்வெளி நிறுவனத்தின் ஆதரவுடன், அங்குள்ள 2 நிறுவனங்கள் இணைந்து இந்த பணிகளை திட்டமிட்டு வருகின்றன.கேப்சூல் வடிவிலான இந்த இயந்திரம் மூலம் காபி உள்ளிட்ட பல்வேறு சூடான பானங்கள் தயாரிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி