செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கார் பந்தய வீரர் ஷூமாக்கரால் வாழ்நாள் முழுவதும் செயல்பட முடியாது என தகவல்!…

கார் பந்தய வீரர் ஷூமாக்கரால் வாழ்நாள் முழுவதும் செயல்பட முடியாது என தகவல்!…

கார் பந்தய வீரர் ஷூமாக்கரால் வாழ்நாள் முழுவதும் செயல்பட முடியாது என தகவல்!… post thumbnail image
ஜெர்மனி:-ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் பார்முலா கார் பந்தய வீரரான மைக்கேல் ஷுமாக்கர் கடந்த ஆண்டு டிசம்பரில் விடுமுறையைக் கழிக்க தனது குடும்பத்தினருடன் ஆல்ப்ஸ் மலையில் உள்ள பிரான்ஸ் நாட்டின் மேரிபெல் சுற்றுலா மையத்திற்கு சென்றிருந்தார். அங்கு 29ஆம் தேதியன்று பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பாறை ஒன்றில் மோதியதில் தலையில் காயமேற்பட்டு நினைவிழந்த நிலையில் பிரான்சில் உள்ள கிரேநோபில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையில் இரண்டு அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற நிலையில் அவர் கோமா நிலையில் வைக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து பலவிதமான செய்திகள் வந்த நிலையில் இந்த மாதம் 16ஆம் தேதி ஷுமாக்கர் கோமாவிலிருந்து மீண்டார் என்ற செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் கிரேநோபில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சுவிட்சர்லாந்தில் உள்ள லோசைன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனை அவரது வீட்டிற்கு அருகில் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.ஷுமாக்கரின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து முன்னணி மருத்துவ நிபுணர் எரிக் ரெட்ரர் கூறுகையில் அவர் வாழ்நாள் முழுவதும் செயல்படமுடியாத நிலையில் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். எப்போதும் மற்றவர்களின் உதவியை அவர் எதிர்நோக்க வேண்டியிருக்கும். நிரந்தர சேதம் அவருக்கு இருக்கக்கூடும் என்றபோதிலும் மூன்று மாதங்களுக்குள் உதவியில்லாமல் எழுந்து உட்காரவோ, ஆறு மாதங்களுக்குள் மின்சார சக்கர நாற்காலியை இயக்கவோ முடியும் என்றால் அது பெரிய வெற்றியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

கோமாவில் இருந்த ஒருவர் ஆறு மாதங்களுக்குப் பிறகு கண் விழிப்பது என்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஒரு நம்பிக்கையான செய்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.பொதுவாக இதுபோன்ற விபத்துகளில் சிக்கி நீண்டகாலம் கோமாவில் இருக்கும் பத்து நோயாளிகளில் ஒருவரே தேறி வருவதாகவும் அல்லது தங்களின் உடல் மற்றும் மனத்திறன்களை முழுமையாக மீட்க முடிவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வார ஆரம்பத்தில் மைக்கேல் ஷுமாக்கரின் முன்னாள் மருத்துவரும் அவர் இனி குறைந்த உணர்வு நிலையில் இருக்கக்கூடும் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி